PUDUVALASAIUAE
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012
செவ்வாய், 24 ஜூலை, 2012
நமது அமைப்பு EPMA சார்பில்
நமது அமைப்பு EPMA சார்பில் இவ்வருடம் பித்ரா - ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம். இவ்வருடமும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன இவ்வருடம் பித்ரா
புனிதமிக்க ரமலானில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மத்தை நபி[ஸல்] அவர்கள் நம் மீது கடமையாக்கியுள்ளார்கள்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;.ஆண்கள், பெண்கள், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். [புஹாரி எண் 1504 ]நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
இந்த தர்மம் கடமையாக்கப்பட்டத்தின் நோக்கம் நோன்புடைய காலங்களில் நாம் செய்த சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாகவும், பெருநாள் அன்று ஏழைகள் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காகவும்தான்.
நம்முடைய ஃபித்ரா முறையாக ஏழைகளை சென்றடைய ஒரே வழி நாமே நேரடியாக வழங்குவதுதான்.
பொதுவாக மார்க்கத்தில் எந்த தர்மமாக இருந்தாலும் முதலில் உறவினர்களில் இருந்து தொடங்கவேண்டும். அவ்வாறு உறவினர்களுக்கு நாம் நமது தர்மங்களை வழங்கும்போது இருமடங்கு கூலி கிடைக்கும் என்பது நபிமொழி. எனவே நமது உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு நமது ஃபித்ராவை வழங்கி அவர்களை அரவணைப்போம்.
நமது உறவினர்களில் ஃபித்ரா பெறும் தகுதியுடைய ஏழைகள் இல்லையெனில் நமது ஊரில் உள்ள நமக்கு தெரிந்த ஏழைகளுக்கு நமது ஃபித்ராவை வழங்குவோம்.
ஒவ்வொருவரும் அவரவர் ஊரில் உள்ள அவரவர் உறவினர்களில் உள்ள ஏழைகளையும், பொதுவான ஏழைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டாலே ஃபித்ரா சேரவேண்டியவர்களுக்குச் சென்றடைந்துவிடும்.
ஞாயிறு, 10 ஜூன், 2012
வெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்
வெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்
'இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்', 'நாம் உங்களை ஒரு நடுநிலைலயான சமுதாயமாக ஆக்கியுள்ளோம்'என்றெல்லாம் இவ்வுலகைப் படைத்த இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட மார்க்கத்தையும் சமுதாயத்தையும் சார்ந்தவர்களான சர்வதேசமுஸ்லீம்களின் இன்றைய மனநிலையை சற்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்;.
தன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைப்பதில்லை.
இவ்வுலகம் படைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கென்று ஒரு நீண்ட நெடியதொரு பாரம்பரியமும், வரலாறும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளதை நபிமார்களின் சரிதைகள் வாயிலாக திருமறை குர்ஆன் தெளிவாகவே உணர்த்துகிறது. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதம் (அலை)-ஹவ்வா (அலை) அவ்விருவரும் முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்தார்கள். எனவே முஸ்லிம்களின் வரலாறும் இவ்வுலகின் முதல் மனித ஜோடியிலிருந்தே தோன்றுகிறது.
செவ்வாய், 5 ஜூன், 2012
"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
Posted by Ayushabegum
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)