திருமண வாழ்த்துக்கள் செய்தேன். புதுமண தம்பதியினர் அனைவருக்கும் அன்புடன் உரித்தாகட்டும்!
1 கவிதை வாழ்த்து
அழகான மலர்காலை கதிர்காண மலரும்வகை
அன்பினொளி கண்டு மனம் பூக்கும்
பழகாதபோதும் ஒருதுணை நாடி ஈருயிர்கள்
பாசமுடன் வாழ்வில் ஒன்றாகும்
இளகாத கடிதென்ற இதயமும் இருவிழிகள்
இணையவே மலர்வண்டு ஆகும்
எழும்ஆசை பெரிதாகி இருகைகள் பலமாக
இணைந்தின்ப ஒளிவாழ்வு காணும்
வளமான வாழ்வெண்ணி வதுவையில் ஒருசேரும்
வகையாம் இம்மணநாளில் இன்று
பழமோ நற்சுவையோடு பிரியாத வகைபோலும்
பிறிதின்றி ஒன்றாகி வாழ்வீர்!
வளமான வாழ்வுபெற விளைகின்ற இருபறவை
வெளிவானில் ஒருசேரப் பறந்தே
இளம்வாழ்வில் எழும்கீத இசைபாடும் மகிழ்வாக
என்றென்றும் இன்பங்கள் காண்க
தழையாகக் கொடியாக தழுவுமொரு மரமாக
துளைதென்றல் நுழையாத இணைவும்
மழைவானில் நீர்சொரிய மண்மீது நதியோடி
மாகடலில் இணைகின்ற விதமும்
விளைவான ஒருநாளும் ஒருபோதும் குறையாது
வேண்டுவரை இன்பங்கள் பொலிய
வளைவானம் போலகன்ற வாழ்வோடும் உயர்வோடும்
வாழ்ந்திடுக, வாழ்கநீர், வாழ்வீர்
நிலையான வாழ்விலொரு பிடிவாதம் சினம் எனது
நலம் மட்டும் பெரிதென்ற எண்ணம்
தலைகொண்டகனம் வேறுதவறான சந்தேகம்
தவிடு பொடியாக்கி விடும் நெஞ்சம்
குலையாது திடமோடு கோவிலென குடும்பமது
குடிவாழ்வு பெரிதென்று எண்ணி
வலைவீசும் விதிகண்டு வழுகிவிடும் கயல்போல
வரும் இடர்கள் வென்றுநீர் வாழ்வீர்
விலையற்ற பொருளாக விட்டுத்தரும் மனப்பாங்கு
வேண்டுமதைக் கைக்கொண்டு வாழ்க
கலையோடு கொஞ்சுந் தமிழ் கதைகூறும் மழலைகளைக்
களிப்போடு பெற்று நிறைவாக
குலையோடு கொத்தாக கனி தூங்கும் மாஞ்சோலை
கொள்ளும் பல குருவிகளும்போலே
நிலையோடு உறவுகளும் நிதம்கூடி மகிழ்வுபெற
நிறைவான வாழ்த்துகளைத் தந்தோம்
வளமோங்க வடிவோங்க வார்த்தைகளில் அன்போங்க
வாசமுறும் மலர்கொண்ட சோலை
உளமோங்க எழிவண்ண உலவுங்காற் றெனஇன்ப
முடன்காதல் என்றும் குறைவின்றி
அளவற்ற நிறைசெல்வம் அகங்காண மழலைகளும்
அமுதமொழி நிறையன்பு வாழ்வு
சுழல்பூமிதனில் ஓங்க துணையோடு குறைவற்ற
தொகை நீண்ட ஆண்டுகள் வாழ்க
***************************
Re: திருமண வாழ்த்துக்கள்!!
2 கவிதை வாழ்த்து
உயிரோடு உயிர்சேர உறவொன்று காணும்
ஒருவாழ்வின் முதல்நாளிதாம்
பயிர்ஈது ஆயிரங் காலத்துக் கென்றே:
பலர் போற்றும்பெரு வாழ்வுதான்
வெயில் கண்டு மலர்கூட்டம் விரிகின்ற போலும்
விளங்கும்உங் கள்வாழ்க் கையில்
மாயிலாடும் மான்கூட்டம் மகிழ்வாகத் துள்ளும்
மனம் காணும் மகிழ்வொன்றுதான்
எழில்கொண்ட வாழ்விலே இணைகின்ற கைகள்
இறுகட்டும் பிடி அன்பினால்
வழிகண்டு நடைகொள்ளூம் புதுவாழ்வில் எங்கும்
வசந்தமே வீசட்டும் மேல்
வெளிவானில் முகிலோடும் விளையாடுந் தென்றல்
வீசட்டும் அதுவீட்டில், வான்
ஒளிதந்து கதிரவன் எழுகின்ற விடியல்
இதுஎன்றும் புதுவாழ்வுகாண்
ஒருவர் பின் இருவராய் ஒருவாழ்வு கண்டீர்
இருவரும் ஒன்று சேர்ந்தீர்
இருவரும் பின்னொன்று மூவரென்றாகி
இன்பமும் கொண்டு வாழ்வீர்
தருமன்பு குறையாது தரணியில் பொங்கித்
தழைக்தோங்கும் வாழ்வினூடே
பெருகட்டும்சந்ததி பெருமைகள் சேர்த்தே
பிறந்திடும் அன்பு வாழ்வு
எதுவந்த போதிலும் ஒருவரோ டொருவர்
உளளத்தில் கள்ளமின்றி
புது வாழ்வின் இந்நாளைப் போலவேயென்றும்
புன்னகை கொண்டு வாழ்வீர்
விதிவந்து விளையாடும் மனமொன்றி நின்றால்
வென்றிடத் துயரோ டிடும்
பதியோடு சதிசெய்யும் உறவுகள் ஓங்கி
பலநூறு ஆண்டு வாழ்க!
*************
உயிரோடு உயிர்சேர உறவொன்று காணும்
ஒருவாழ்வின் முதல்நாளிதாம்
பயிர்ஈது ஆயிரங் காலத்துக் கென்றே:
பலர் போற்றும்பெரு வாழ்வுதான்
வெயில் கண்டு மலர்கூட்டம் விரிகின்ற போலும்
விளங்கும்உங் கள்வாழ்க் கையில்
மாயிலாடும் மான்கூட்டம் மகிழ்வாகத் துள்ளும்
மனம் காணும் மகிழ்வொன்றுதான்
எழில்கொண்ட வாழ்விலே இணைகின்ற கைகள்
இறுகட்டும் பிடி அன்பினால்
வழிகண்டு நடைகொள்ளூம் புதுவாழ்வில் எங்கும்
வசந்தமே வீசட்டும் மேல்
வெளிவானில் முகிலோடும் விளையாடுந் தென்றல்
வீசட்டும் அதுவீட்டில், வான்
ஒளிதந்து கதிரவன் எழுகின்ற விடியல்
இதுஎன்றும் புதுவாழ்வுகாண்
ஒருவர் பின் இருவராய் ஒருவாழ்வு கண்டீர்
இருவரும் ஒன்று சேர்ந்தீர்
இருவரும் பின்னொன்று மூவரென்றாகி
இன்பமும் கொண்டு வாழ்வீர்
தருமன்பு குறையாது தரணியில் பொங்கித்
தழைக்தோங்கும் வாழ்வினூடே
பெருகட்டும்சந்ததி பெருமைகள் சேர்த்தே
பிறந்திடும் அன்பு வாழ்வு
எதுவந்த போதிலும் ஒருவரோ டொருவர்
உளளத்தில் கள்ளமின்றி
புது வாழ்வின் இந்நாளைப் போலவேயென்றும்
புன்னகை கொண்டு வாழ்வீர்
விதிவந்து விளையாடும் மனமொன்றி நின்றால்
வென்றிடத் துயரோ டிடும்
பதியோடு சதிசெய்யும் உறவுகள் ஓங்கி
பலநூறு ஆண்டு வாழ்க!
*************
Re: திருமண வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக் கவிதை 3
மண்ணில் இவருக் கிவரென்றே
மாறா விதியைச் செய்சக்தி
கண்ணும் கண்ணின் இமைபோலும்
காதல் வாழ்வில் ஒன்றாக்க
எண்ணம் தன்னில் ஒன்றாகி
இன்பவாழ்வின் நிலைகண்டீர்
வண்ணம் கொள்ளும் இந்நாளில்
வாழ்த்தும் மலராய் கவியீந்தேன்
தண்மை கொண்டபொய்கை மேல்
தாவும் தென்றல் தாரின்பம்
எண்ணம் எங்கும் வீசட்டும்
இன்ப மலர்கள் பூக்கட்டும்
கண்ணைக் காக்கும் இமைபோலும்
காதல் வாழ்வில் கைகொண்டு
மண்ணின் மாந்தர் வாழ்த்தென்னும்
மாலை சூடி மணமாவீர்
கைகள் சேரும் உள்ளங்கள்
காதல்வானில் நீந்தட்டும்
வெய்யில் காணும் விரைமேகம்
வேண்டும் திசையில் சேர்க்கட்டும்
கொய்யும் பூக்கள் போல்மின்னும்
கோடி விண்மீன் கொண்டங்கு
செய்யும் நல்லா பரணங்கள்
சேர்ந்தே மேனி ஜொலிக்கட்டும்
மெய்யில் வாழ்வு உயரின்பம்
மேன்மை கண்டு செழிக்கட்டும்
பொய்களின்றி உண்மைகொள்
பேச்சில் வாழ்வு இனிக்கட்டும்
தெய்வம் வாழும்கோவில்போல்
தோன்றும் இல்லம் சிறக்கட்டும்
வையம் வாழ்த்த வசந்தங்கள்
வந்தே வாழ்வில் பொங்கட்டும்
கொஞ்சும் மழலை கூடட்டும்
குழந்தை இன்பம் பெருகட்டும்
பஞ்சாய் மனது விளங்கட்டும்
பாசம் தழைத்து ஓங்கட்டும்
நெஞ்சில் அன்பு நிறையட்டும்
நேர்மை திறனும் பெருகட்டும்
மஞ்சம் பொலிந்தே மலரட்டும்
மகிழ்வே முடிவாய் விளங்கட்டும்
******************
Great Blog in tamil thanks for sharing.
பதிலளிநீக்குdirect flights to vadodara from usa
Non stop flights from USA to India
Cheapairlines
Non stop flights from USA to Bangalore
Direct flights from Delhi to USA
Direct Flights to Delhi From USA
nonstop flights to mumbai from usa