WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



திங்கள், 4 ஜூன், 2012

தேமுதிகவின் 29 எம்.எல்.ஏக்களும் அதிமுக போட்ட பிச்சைதான். சரத்குமார் பேச்சால் தொண்டர்கள் கொதிப்பு.



Tuesday  05  June  2012  
அதிமுக போட்ட பிச்சையில் தான் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு தேமுதிக வட்டாரத்தை கொதிப்படைய வைத்துள்ளது.


இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து புதுக்கோட்டை தொகுதி, கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்காடு கிராமத்தில் தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து புதுப்பட்டியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

தேமுதிகவினருக்கு அடிப்படை நாகரீகமோ, அடிப்படை சட்டமோ தெரியாது. அதை கட்சி தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுக்க அக்கட்சியின் தலைமைக்கும் இது தெரியாது. அது தான் கொடுமை. பகுத்தறிவு, நேர்மை, நீதி, ஜனநாயகம் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு தேமுதிகவினர் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் அரசியல் உருப்படும்.

தேமுதிக 29 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டுள்ளது என்றால் அதற்கு அதிமுக போட்ட பிச்சை தான் காரணம் என்பதை தேமுதிகவினரும், அதன் தலைமையும் உணர வேண்டும். இல்லை எனில் உணர வைக்கப்படுவார்கள். புதுக்கோட்டையில் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதே போல் தேமுதிகவுக்கு ஏற்படப்போகும் படுதோல்வியையும் யாராலும் தடுக்க முடியாது.

மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த திமுகவை வீழ்த்தி தொலை நோக்கு பார்வையுடன் மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா பணியாற்றி வருகின்றார். அவரது கரத்தை வலுப்படுத்த அதிமுகவை மக்கள் ஆதரி்க்க வேண்டும் என்றார்.

முன்னதாக புதுப்பட்டியில் உள்ள கடை வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சரத்குமார் பிரச்சாரத்தை தொடங்க முயன்றார். அப்போது அந்த வழியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம் மேற்கொள்ள இருந்ததால் அக்கட்சி தொண்டர்கள் பிரேமலதாவை வரவேற்க கட்சி கொடியுடன் காத்திருந்தனர்.

அப்போது சரத்குமார் பேசத் தொடங்கியதும் தேமுதிக கொடியை காட்டி விஜயகாந்த் வாழ்க, பிரேமலதா வாழ்க என அவர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு சமகவினர் சரத்குமார் வாழ்க என கோஷம் போட அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பையும் அங்கிருந்த போலீசார் அமைதிப்படுத்தினர்.

as



.thedipaar  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக