WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



திங்கள், 21 மே, 2012

வருமான வரி அதிகாரி போல் நடித்து மளிகை வியாபாரியிடம் ரூ. 43 லட்சம் கொள்ளை: எர்ணாவூரில் 4 பேர் கைவரிசை





திருவொற்றிïர், மே. 21-

எர்ணாவூரைச் சேர்ந்தவர் கனகராஜ். ஐ.டி.சி. கம்பெனி அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடையையொட்டி வீடு உள்ளது. எர்ணாவூர் பகுதி வியாபாரிகள் சங்க துணைத் தலைவராகவும் உள்ளார். கனகராஜ் தனது கடைக்கு அருகே புதிதாக டிபார்ட் மெண்ட் ஸ்டோர் கட்டி வருகிறார். இன்று காலை 7 மணி அளவில் மனைவி மகளுடன் கனகராஜ் வீட்டில் இருந்தார்.

அப்போது இன்னாவோ காரில் 4 வாலிபர்கள் அவரது வீட்டு முன் வந்து  இறங்கினார்கள். அனைவரும் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து இருந்தனர். ஒருவர் மட்டும் தொப்பி அணிந்து இருந்தார். மிடுக்காக இருந்த அவர்கள் மளமளவென்று கனகராஜ் வீட்டுக்குள் புகுந்தனர்.

நாங்கள் வருமான வரி அலுவலகத்தில் இருந்து வந் துள்ளோம். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும்'' என்று கூறினார்கள். "உங்களது அடையாள அடையாள  காட்டுங்கள்'' என்று கனகராஜ் கேட்டார். உடனே 4 பேரில் ஒருவர் ஐ.டி. கார்டை காட்டினார். அதைப் பார்த்ததும் அவர்கள் வருமான வரி அதிகாரி என கனகராஜ் நம்பினார்.

உடனே 4 பேரும் கனகராஜ் வீட்டு வாசல், ஜன்னல் கதவை மூடினர். சோபாவில் அமர்ந்த அவர்கள் கனகராஜிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர். பின்னர் ஒருவர் "உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது'' என்று கேட்டார். அதற்கு கனகராஜ் பணம் எதுவும் இல்லை என்று கூறினார்.

உடனே அந்த வாலிபர்கள், "நீங்களாக எடுத்துக் கொடுத்தால் நல்லது. நாங்கள் தேடி கண்டு பிடித்தால் சிக்கலாகி விடும்'' என்று மிரட்டினர். உடனே  கனகராஜ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அமைப்பதற்காக வங்கியில் எடுத்து வைத்திருந்த ரூ. 43 லட்சம் பணத்தையும் தன்னிடம் இருந்த 110 பவுன் நகையையும் காட்டினார்.

பணத்தை  வாங்கி கொண்ட அவர்கள் நகையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இந்த பணத்துக்கு மட்டும் உரிய கணக்கு காட்டி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு ஒரு செல்போன் நம்பரை கொடுத்தனர்.

பின்னர் 4 பேரும் காரில் ஏறி புறப்பட்டனர். 4 வாலிபர்களும் சென்ற பின்னர் கனகராஜ் அவர்கள் கொடுத்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. பல நேரம் தொடர்பு கொண்டும் கிடைக்காததால் வருமான வரி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசினார். நாங்கள்  யாரும் சோதனைக்கு வரவில்லை என்று வருமான வரி அலுவலகத்தில் கூறினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் உடனே மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 4 பேர் சென்ற திசையை நோக்கிப் போய் தேடினார். ஆனால் அந்த 4 பேரும் ரூ. 43 லட்சத்துடன் காரில் தப்பி விட்டனர்.

மோசம் போனதை உணர்ந்த  கனகராஜ் எண்ணூர் உதவி கமிஷனர் செல்வ அரசுவிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கைரேகை நிபுணர்கள் கனகராஜ் வீட்டுக்கு வந்து கொள்ளையர்களின் கைரேகை  தடயங்களை பதிவு செய்தனர். கொள்ளையர்களின் அங்க  அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நூதன  கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக