துருக்கி நாட்டின் கிராமப்புறத்தில் ஈப்பிடிப்பான் வகையைச் சேர்ந்த ஒரு பறவை
இறந்து கிடந்தது. இதன் காலின் அடிப்பகுதியில் இஸ்ரேல் என்று எழுதப்பட்ட வளையம்
இருந்தது.அதன் மூக்கு துவாரங்கள் வழமையை விட மிகப் பெரியதாக இருந்தன. அழகிய வண்ண
நிறச் சிறகுகள் கொண்ட இந்த பறவை இறந்து கிடந்தது யாருக்கு பரிதாபத்தை
ஏற்படுத்தவில்லை.

மாறாக அதன் மூக்கு துவாரத்தில் மைக்ரோசிப் அல்லது கருவி
ஏதேனும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதோ என்று அச்சம் தான் ஏற்பட்டது.இதன் பின்பு
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பொதுமக்களின்
சந்தேகத்தை தீர்த்து வைத்தனர்.பிற இடங்களுக்கு செல்லும் பறவைகளுகு்கு காலில் வளையம்
மாட்டுவது இயல்பு என்றும், அப்போது தான் அது போகும் பாதையை அறிந்து கொள்ள அறிவியல்
நிபுணர்களால் இயலும் என்றும் காவல்துறையினர் கூறினர்.
இதனையடுத்து இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டதில் அங்குள்ள இயற்கை பாதுகாப்பு கழகம்
இந்த பறவையின் வரிசை எண்ணை உறுதி செய்தது.இஸ்ரேலின் வடக்கு முனையிலிருந்து இந்த
பறவைகள் தென்கிழக்காகப் பறந்து துருக்கி நாட்டை வந்தடைகின்றன என்பதும்
தெரியவந்தது.
yarlmedia.com thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக